உள்ளூர் செய்திகள்

இன்று நிறைவு: மாணவர்களே பெற்றோரே தவறவிட வேண்டாம்

மதுரை: மதுரையில் நேற்று முன்தினம் துவங்கிய தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி இன்று (மார்ச் 28) நிறைவு பெறுகிறது.இரண்டு நாட்களும் மாணவர்கள், பெற்றோர் கூட்டம் அலைமோதியது. 100க்கும் மேற்பட்ட கல்வி அரங்குகளில் நீண்ட வரிசையில் நின்று பெற்றோர், மாணவர்கள் உயர்கல்வி தொடர்பான படிப்புகள், கல்லுாரி வசதிகள், கட்டணங்கள் குறித்த விவரங்கள் கேட்டு பயனடைந்தனர். முதல்முறையாக அமைக்கப்பட்டுள்ள முன்னணி பள்ளிகளின் அரங்குகளையும் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.இன்று (மார்ச் 28) தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது. பிளஸ்1, பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்கள், பிற வகுப்பு மாணவர்கள், பெற்றோர் எந்த படிப்பை எந்த கல்லுாரியில், எந்த பள்ளியில் தேர்வு செய்யலாம் என்ற குழப்பத்தை தீர்க்க தமுக்கம் மைதானத்திற்கு இன்றே வாருங்கள். வாய்ப்பை தவறவிடாதீர்கள்.இந்நிகழ்ச்சிக்கு பவர்டு பை பங்களிப்பாளராக கோவை ஸ்ரீராம கிருஷ்ணா எஜூகேஷனல் இன்ஸ்டிடியூஷன்ஸ், அமிர்தா விஸ்வ வித்யா பீடம் செயல்படுகிறது. திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., காலேஜ் ஆப் இன்ஜினியரிங் அன்ட் டெக்னாலஜி, ஸ்ரீ சக்தி இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அன்ட் டெக்னாலஜி, கே.எம்.சி.எச்., அன்ட் டாக்டர் என்.ஜி.பி., நிறுவனங்கள், கோவை எஸ்.என்.எஸ்., இன்ஸ்டிடியூஷன்ஸ், கற்பகம் இன்ஸ்டிடியூஷன்ஸ், ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டர்டு அக்கவுண்டன்ஸ் ஆப் இந்தியா ஆகியன இணைந்து வழங்குகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்