உள்ளூர் செய்திகள்

பயிற்சி மையத்திற்கு புத்தகங்கள் அமைச்சர் சக்கரபாணி வழங்கினார்

ஒட்டன்சத்திரம்: காளாஞ்சிபட்டி போட்டி தேர்வு பயிற்சி மையத்திற்கு ரூ.2 லட்சம் மதிப்பீட்டிலான புத்தகங்களை அமைச்சர் சக்கரபாணி வழங்கினார்.அப்போது அவர் பேசியதாவது: காளாஞ்சிபட்டி கலைஞர் நுாற்றாண்டு போட்டி தேர்வு பயிற்சி மையத்தில் 350 மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். அனைவருக்கும் தமிழ்நாடு அரசின் அனைத்து போட்டி தேர்வுகளுக்குமான புத்தகங்கள் வழங்கப்படுகிறது. இந்த மையத்தில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு தேநீர், சிற்றுண்டி வழங்கிட கருத்துரு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் திட்டம் செயல்படுத்தப்படும். தன்னம்பிக்கை, குறிக்கோள், விடாமுயற்சி கடின உழைப்புடன் செயல்பட்டால் வாழ்க்கையில் வெற்றி அடையலாம் என்றார்.கலெக்டர் சரவணன், தாசில்தார் சஞ்சய் காந்தி, முன்னாள் தாசில்தார் பழனிச்சாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் காமராஜ், பயிற்சி மைய பொறுப்பாளர்கள் சுப்பிரமணியன், முரளிதரன், ஒன்றிய செயலாளர் பாலு கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்