உள்ளூர் செய்திகள்

பள்ளி செல்லாத குழந்தைகள் மீது கவனம் செலுத்த திட்டம்

கோவை: கோவை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு பள்ளிகளில், 2025-26 கல்வியாண்டுக்கான பள்ளி மேலாண்மைக் குழுவின் (எஸ்.எம்.சி.,) முதல் கூட்டம் நடைபெற்றது.அனைத்து பள்ளிகளிலும் மாதம் ஒருமுறை, மாணவர்களின் கல்வி முன்னேற்றம் மற்றும் பள்ளியின் ஒட்டுமொத்த மேம்பாட்டை நோக்கமாக கொண்டு எஸ்.எம்.சி., கூட்டம் கட்டாயம் நடத்த, பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, நடப்பு கல்வியாண்டுக்கான முதல் கூட்டம் அனைத்து பள்ளிகளிலும் நடத்தப்பட்டது. இதில், மாணவர் வருகை, மாணவர் மதிப்பீடு, இடைநிறுத்தம், பள்ளி செல்லாத குழந்தைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.கவுண்டம்பாளையம் ரங்கசாமி நகர் மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, காந்திமாநகர் அரசு உயர் நிலைப்பள்ளி, அரசூர், கல்வீரம்பாளையம், கண்ணம்பாளையம் ஆகிய பகுதியில் செயல்படும் அரசு மேல்நிலைப்பள்ளிகள் உள்ளிட்ட பள்ளிகளிலும் கூட்டம் நடைபெற்றது.அரசூர் பள்ளியில் நடைபெற்ற கூட்டத்தில், பள்ளி வளாகத்திற்குள் மற்றும் சுற்றியுள்ள 100 மீட்டர் சுற்றளவிற்குள் போதைப் பொருட்கள் விற்பனைக்கு எதிரான விழிப்புணர்வு போஸ்டர்கள் ஒட்ட தீர்மானிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்