வேளாண் பல்கலைக்கழகத்தில் முதல்நிலை சேர்க்கை நிறைவு- 12,200 பேர் கலந்துகொண்டனர்
கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் வேளாண் பிரிவுகளில் 2025-26 கல்வியாண்டுக்கான இளமறிவியல் மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. இதில், 7.5% இடஒதுக்கீட்டிற்கும் தாழ்வுவிகித பிரிவுக்குமான முதல்நிலை ஆன்லைன் கலந்தாய்வு ஜூலை 9 முதல் 15 ஆம் தேதி வரை நடைபெற்றது.இதில் மொத்தம் 12,200 மாணவர்கள் கலந்துகொண்டுள்ளனர். 7.5% இடஒதுக்கீட்டிற்கான சேர்க்கையில், அரசுப் பள்ளியில் 6வது வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படித்த 395 மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதுபோல், 225 இடங்கள் பிற்படுத்தப்பட்ட பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.மாணவர்கள் தேர்வான துறைகள், மதிப்பெண்கள் மற்றும் விருப்பங்களை அடிப்படையாகக் கொண்டு தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு மின்னஞ்சல் , கைபேசி மூலமாக தகவல் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் பட்டியல் http://tnau.ucanapply.com தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.சான்றிதழ் சரிபார்ப்பு ஜூலை 19ஆம் தேதி காலை 9 மணிக்கு தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும். அதற்காக மாணவர்கள் தங்களின் 10, 12ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், சமூகச் சான்றிதழ் மற்றும் மாற்றுச் சான்றிதழுடன் நேரில் வர வேண்டும்.மேலும் தகவலுக்கு: ugadmissions@tnau.ac.in