கல்வி கட்டண சலுகை திறனறி தேர்வில் 1,504 பேர் பங்கேற்பு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளியில் நடந்த கல்வி கட்டண சலுகை திறனறி தேர்வில் 1,504 மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.ஏ.கே.டி., பள்ளி நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன் கூறியதாவது;கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளியில் பெற்றோர்களின் பொருளாதார சுமை மற்றும் மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு கல்வி கட்டண சலுகை தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்தாண்டிற்கான திறனறி தேர்வு ஏ.கே.டி., பள்ளி மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது.இதில் 10ம் வகுப்பு அனைத்து பள்ளி மாணவ, மாணவிகள் 1,504 பேர் பங்கேற்றனர்.ஏ.கே.டி., கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்கள் தேர்வினை மேற்பார்வையிட்டனர். தேர்வையொட்டி விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், கடலுார் ஆகிய மாவட்டங்களில் இருந்து மாணவர்கள் வந்து செல்வதற்கு இலவச பஸ்கள் இயக்கப்பட்டன.திறனறி தேர்வு எழுதிய மாணவ மணவிகள் பெற்ற மதிப்பெண் விவரம் இன்று (10ம் தேதி) மாலை 6:00 மணிக்கு பதிவு எண் அல்லது தொலைபேசி எண்ணை உள்ளீடு செய்து ஏ.கே.டி., இணையதளமான www.aktinstitutions.com ல் அறிந்து கொள்ளலாம்.பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு மதிப்பெண் மற்றும் ஏ.கே.டி., கட்டணச் சலுகை மதிப்பெண் அடிப்படையில் 25 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை பிளஸ் 1, பிளஸ் 2 படிப்பதற்கான கட்டண சலுகைகள் வழங்கப்படவுள்ளது.கட்டணச்சலுகை குறித்த விவரங்களை 10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகும் நாளன்று 93611 6542, 63691 46590 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர், கூறினார்.