உள்ளூர் செய்திகள்

மாணவ - மாணவியர் சேர்க்கை இல்லை 3 ஆண்டில் 51 சமூக நீதி விடுதிகள் மூடல்

சென்னை: கடந்த மூன்று ஆண்டுகளில், மாணவ - மாணவியர் சேர்க்கை இல்லாத, 51 ஆதிதிராவிடர் நலப்பள்ளி விடுதிகள், அதாவது, சமூக நீதி விடுதிகள் மூடப்பட்டுள்ளன.தமிழக அரசின் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ், 1,331 சமூக நீதி விடுதிகள் செயல்படுகின்றன. இவற்றில், 65,000க்கும் அதிகமான, பள்ளி, கல்லுாரி, மாணவ - மாணவியர் தங்கி படித்து வருகின்றனர்.விடுதியில் உணவு, சுகாதாரம் உள்ளிட்ட பிரச்னைகள் உள்ளதால், இங்கு தங்கி படிக்க, அவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை.அதிகாரிகள் முடிவுஇதனால், விடுதியில் மாணவ - மாணவியர் சேர்க்கை, ஆண்டுதோறும் சரிந்து வரும் நிலையில், எண்ணிக்கையை அதிகரிக்க, அவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை அரசு வழங்குகிறது.பொது சமையலறை வழியே, அனைத்து விடுதி மாணவர்களுக்கும் ஒரே மாதிரி உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.எனினும், விடுதியில் சேருவோர் எண்ணிக்கை குறைந்தபடி உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக மாணவர்கள் சேர்க்கை இல்லாத மற்றும் குறைந்த மாணவ - மாணவியர் உள்ள விடுதிகளை மூட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.அந்த வகையில், மதுரை, புதுக்கோட்டை, தேனி, கோவை, துாத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில், 51 விடுதிகள் தற்போது மூடப்பட்டுள்ளன.ஆதிதிராவிடர் நலத் துறை விடுதி காப்பாளர்கள் சிலர் கூறியதாவது:நடப்பாண்டு மாணவர்கள் சேராத விடுதிகள் பட்டியலை, கடந்த ஜூலையில் ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் வெளியிட்டனர். அதன்படி, 100க்கும் மேற்பட்ட விடுதிகளில், புதிதாக மாணவர்கள் சேரவில்லை.இதனால், மாணவர் சேர்க்கை இல்லாத மற்றும் , 10க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பள்ளி விடுதியை, அதிகாரிகள் மூட முடிவு செய்துள்ளனர். அதன்படி, மதுரை, கோவையில், அதிகபட்சமாக தலா, 10 விடுதிகள் உட்பட மொத்தம், 51 விடுதிகள் மூடப்பட்டுள்ளன.இவ்வாறு அவர்கள் கூறினர்.தேவை அதிகம்ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் சிலர் கூறுகையில், 'கடந்த 10 ஆண்டுகளில், ஆதி திராவிடர் நல விடுதிகளில் , மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. கல்லுாரி மாணவ - மாணவியர் விடுதிகளுக்கு தேவை அதிகம் உள்ளது.'எனவே, பள்ளி மாணவ - மாணவியர் சேராத விடுதிகளை, கல்லுாரி விடுதிகளாக மாற்ற உள்ளோம். மாணவர் சேர்க்கை இல்லாத விடுதிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. விரைவில் அவை திறக்கப்படும்' என்றனர். மூடப்பட்ட விடுதிகள் விபரம் கோவை - 11 மதுரை - 10 புதுக்கோட்டை - 9 விருதுநகர் - 6 சிவகங்கை - 4 திண்டுக்கல் - 4 ராமநாதபுரம் - 2 கன்னியாகுமரி - 2 தென்காசி - 2 தேனி - 1


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்