உள்ளூர் செய்திகள்

பயோ-மெட்ரிக் முறையில் பள்ளி வருகைப் பதிவேடு

டெல்லியில் உள்ள பள்ளிகளில், வரும் ஜுலை மாதம் முதல் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகைப் பதிவேட்டை பயோ-மெட்ரிக் முறையில் மாற்ற டெல்லி மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. டெல்லி மாநகராட்சித் தலைவர் சுபாஷ் ஆர்யா கூறுகையில், டெல்லியில் உள்ள துவக்கப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களும், ஆசிரியர்களும் பயோ-மெட்ரிக் முறையில் வருகைப் பதிவேடு செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. துவக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் இம்முறை அறிமுகமாகும். மாணவர்களின் தகவல்கள் அடங்கிய ஸ்மார்ட் கார்ட் வழங்குவது பற்றியும் திட்டமிட்டு வருகிறோம் என்று அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்