உள்ளூர் செய்திகள்

மருத்துவ உயர் சிறப்பு பட்ட மேற்படிப்பிற்கான விண்ணப்பம்

2011-2012ம் கல்வியாண்டில் மருத்துவ உயர் சிறப்பு பட்ட மேற்படிப்பிற்கான (டி.எம்./எம்.சி.எச்.) மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. உயர் சிறப்பு படிப்பிற்கான விண்ணப்ப படிவத்தை மே 16ம் தேதி முதல் ஜுன் 2ம் தேதி பிற்பகல் 3 மணி வரை  www.tnhealth.org, www.tn.gov.in என்ற இணைதயளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பப் படிவங்கள் தேர்வுக் குழு அலுவலகத்திலோ அல்லது இதர மருத்துவக் கல்லூரிகளிலோ வழங்கப்பட மாட்டாது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களுடன் ஏதாவது ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் மே 14ம் தேதிக்குப் பின் பெறப்பட்ட ரூ.2000க்கான குறுக்குக் கோடிட்ட வரைவோலை இணைக்கப்பட வேண்டும். இந்த விண்ணப்பக் கட்டணத்தில் இருந்து தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. தமிழ்நாடு டாக்டர். எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தை தவிர, இதர பல்கலையில் இருந்து பட்ட மேற்படிப்பு பட்டம் பெற்றோர் கலந்தாய்விற்கு வரும் போது உரிய தகுதிச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். சமர்ப்பிக்கத் தவறினால் அவர்கள் இப்படிப்பிற்கு தேர்வு செய்யப்படமாட்டார்கள். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களுடன் ஜுன் 2ம் தேதி பிற்பகல் 5 மணிக்குள் செயலாளர், தேர்வுக்குழு, எண் 162, பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை - 10 வந்து சேர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்