வேல்ஸ் பல்கலையில் நானோ-சயின்ஸ் முதுகலை பட்டபடிப்பு
வேல்ஸ் பல்கலைக் கழகத்தில் வரும் கல்வி ஆண்டில் நானோ சயின்ஸ் முதுகலை பட்டப்படிப்பு அறிமுகப்படுத்தப்படுகிறது. கல்வித் தகுதி பார்மசி, இயற்பியல், உயிரியல், பயோ டெக்னாலஜி, மைக்ரோ பயாலஜி பாடப்பிரிவுகளில் இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும், பிளஸ் வரையாவது கணிதப் பாடம் படித்திருக்க வேண்டியது அவசியம். முதல் ஆண்டில் 30 மாணவர்கள் சேர்க்க அனுமதிக்கப்படுவார்கள். விண்ணப்பப் படிவங்களும், சேர்க்கையும் பல்லாவரததில் உள்ள பல்கலை வளாகத்திலும், நந்தனத்தில் உள்ள பல்கலை அலுவலகத்திலும் நடைபெறும். நானோ சயின்ஸ் துறையில் மாணவர்கள் உயர்ந்த திறனை பெறும் வகையில் இந்த படிப்பு அறிமுகப்படுத்தப்படுகிறது. இப்படிப்பினை முடிக்கும் இளைஞர்களுக்கு இந்தியாவிலும், உலக நாடுகளிலும் ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளன. நானோ மெடிசின், நானோ எலக்ட்ரானிக்ஸ், நானோ பயோ டெக்னாலஜி, நானோ கெமிக்கல், நானோ இன்ஜினியரிங், நானோ எனர்ஜி மெட்டீரியல்ஸ் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றும் வாய்ப்பு கிட்டும் என்று பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.