சமச்சீர் கல்வி நிபுணர் குழு முதல்வருடன் ஆலோசனை
சமச்சீர் கல்வியை அமல்படுத்துவது குறித்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவைத் தொடர்ந்து, தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி தலைமையில், சமச்சீர் கல்வியின் தரத்தை ஆராய நிபுணர் குழுவை முதலமைச்சர் ஜெயலலிதா அமைத்தார். இக்குழுவினர் சமச்சீர் கல்வி குறித்து இரண்டு முறை முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் ஆலோசனை நடத்தியுள்ளனர். இந்த நிலையில், நிபுணர் குழுவினர் நாளையும் ஜெயலலிதாவை சந்தித்து ஆலோசனை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, ஆய்வறிக்கையை ஜுலை 6ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.