உள்ளூர் செய்திகள்

அண்ணாமலை பல்கலை பி.இ., பி.எஸ்சி., தேர்வு முடிவு

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடப்பு கல்வியாண்டில் பி.இ., பி.எஸ்சி., (விவசாயம்) படிப்பில் சேருவதற்கான மாணவர்கள் தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் உள்ள மாணவர்கள் பி.இ. படிப்பில் சேரத் தகுதி பெற்றவர்களாவர். அனைத்துப் பிரிவினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (பிசி), பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் முஸ்லிம் (பிசிஎம்), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் - அருந்ததியினர், பழங்குடியின வகுப்பினர் என ஒவ்வொரு பிரவினருக்கும் தனித்தனி பட்டியல் வெளியாகியுள்ளது. தேர்வு பட்டியல் ஜுலை 18ம் தேதி வெளியான அனைத்து நாளிதழ்களிலும் வெளியாகியுள்ளது. மேலும் தகவல்கள் அறிய அண்ணாமலைப் பல்கலையின் இணையதளத்தைப் பார்க்கவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்