அண்ணாமலைப் பல்கலை. பி.எட். விண்ணப்பிக்க கடைசி நாள்
தமிழகத்தில் உள்ள தகுதியான மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை தமிழகத்தில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக படிப்பு மையங்கள், தகவல் மையங்களில் பெற்றுக் கொள்ளலாம். ஆகஸ்ட் 10ம் தேதி மாலைக்குள் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டும். அதன்பிறகு வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். பி.எட். படிப்பில் சேர விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு ஆகஸ்ட் 28ம் தேதி தமிழகத்தின் பல்வேறு மையங்களில் நுழைவுத் தேர்வு நடத்தப்படும். மேலும் விவரங்களுக்கு அண்ணாமலைப் பல்கலையின் இணையதளத்தைப் பார்க்கவும்.