உள்ளூர் செய்திகள்

எம்.ஐ.டி. மாணவர்களுக்கு ஒரே நாளில் வகுப்புகள் துவக்கம்

எம்.ஐ.டி.யில் அனைத்துப் பாடப்பிரிவு மாணவர்களுக்கும் ஒரே நாளில் வகுப்புகளைத் துவக்க அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியான எம்.ஐ.டி.யின் தலைவர் எடுத்த சில நடவடிக்கைகளுக்கு மாணவர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் கல்லூரி காலவரையின்றி மூடப்பட்டது. இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ பிரதிநிதிகளுடன் பல்கலைக்கழக அதிகாரிகள் பேச்சு நடத்தினர். கூட்டத்தின் முடிவில், அனைத்து மாணவர்களுக்கும் ஒரே நாளில் கல்லூரியைத் திறக்க பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. கூட்டத்திற்குப் பின்னர் பேராசிரியர் ஒருவர் கூறுகையில், முதலாமாண்டு மாணவர்களுக்கு ஒரு நாளிலும், மற்ற மாணவர்களுக்கு வேறொரு நாளிலும் வகுப்புகள் துவங்குவது சுமூகமான சூழ்நிலையை ஏற்படுத்தாது என்பதால் அனைவருக்கும் ஒரே நாளில் கல்லூரியைத் திறக்க திட்டமிட்டுள்ளோம். ஆயுத பூஜை விடுமுறைகளுக்குப் பிறகே கல்லூரி திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்