உள்ளூர் செய்திகள்

மாணவ - மாணவியருக்கான செயல்பாட்டு விளக்கம்

சென்னை: காவல் துறை செயல்பாடுகள் குறித்து, பள்ளி மாணவ, மாணவியருக்கு விளக்கும் நிகழ்ச்சி, சென்னை, துரைப்பாக்கம், கண்ணகி நகர் போலீஸ் ஸ்டேஷனில் நடந்தது. சென்னை மாநகர காவல் துறையின் செயல்பாடுகளை பள்ளி மாணவ, மாணவியர் அறிந்து கொள்ளும் வகையில், &'துளிர்&' என்ற தன்னார்வ அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன் சார்பில், ஒவ்வொரு ஆண்டும், குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, பள்ளி மாணவர்களுக்கு, காவல் துறையின் செயல்பாடுகள் குறித்து, அந்தந்த போலீஸ் ஸ்டேஷன்களில் விளக்கப்படுகிறது. இந்த ஆண்டு, பள்ளி மாணவ, மாணவியருக்கு காவல் துறையின் செயல்பாடுகள் குறித்து விளக்கும் நிகழ்ச்சி, ராஜிவ்காந்தி சாலையில் உள்ள கண்ணகி நகர் போலீஸ் ஸ்டேஷனில் நடந்தது. அடையாறு துணை கமிஷனர் சுதாகர், துரைப்பாக்கம் உதவி கமிஷனர் ரவி, கண்ணகி நகர் இன்ஸ்பெக்டர் கஜபதி மற்றும் உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டு மாணவ, மாணவியருக்கு காவல் துறையின் இயக்கம், ஆயுதங்கள் பயன்படுத்துவது, தொலைத் தொடர்பு கருவிகளின் செயல்பாடுகள், முதல் தகவல் அறிக்கை, லாக்கப் அறை உள்ளிட்டவை குறித்து விளக்கினர். இந்நிகழ்ச்சியில், கண்ணகி நகர் அரசு மேல்நிலைப் பள்ளி, துரைப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவ, மாணவியர் பங்கேற்றனர். பின், மாணவ, மாணவியருக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இரண்டு பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள், மாவட்ட அளவில் நடக்கும் காவல் துறை குறித்த பேச்சுப் போட்டியில் கலந்து கொள்வர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்