பிரிட்டிஷ் பல்கலை.களில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
இதனை உறுதிப்படுத்தும் வகையில், கடந்த ஆண்டில் எப்போதும் இல்லாத அளவுக்கு 11,126 பேருக்கு பிரிட்டிஷ் விசா வழங்கப்பட்டுள்ளது. அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 65 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. விசா சேவை அலுவலகம், பிரிட்டிஷ் கவுன்சில், கல்வி ஆலோசனை முகவர்கள் ஆகியோரின் ஒருங்கிணைந்த முயற்சி இல்லாவிட்டால் இந்த எண்ணிக்கையை எட்டியிருக்க முடியாது என்று தென்னிந்தியாவுக்கான பிரிட்டிஷ் கவுன்சில் இயக்குநர் கிரிஷ் கிப்சன் தெரிவித்தார். பிரிட்டிஷ் கவுன்சிலும் பிரிட்டிஷ் தூதரக விசா சேவை அலுவலகமும் இணைந்து பிரிட்டிஷ் கல்வி ஆலோசனை முகவர்களுக்கு இரு மாத ஆன்லைன் பயிற்சியை நடத்தியுள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் தென்னிந்தியாவில் இதுவரை 51 முகவர்கள் இந்த பயிற்சி பெற்றுள்ளனர். அவர்களுக்குத் தேர்வும் நடத்தப்பட்டது. அதில் மூன்று முகவர்கள் 75 சதவீத மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனர் என்று தென்னிந்தியாவுக்கான பிரிட்டிஷ் கவுன்சில் இயக்குநர் கிரிஷ் கிப்சன் தெரிவித்தார். பிரிட்டிஷ் உயர்கல்வி நிறுவனங்களுக்கு மாணவர்களை தேர்வு செய்து அனுப்புவதில் முகவர்களின் முக்கியப் பங்கை பிரிட்டிஷ் கவுன்சில் அங்கீகரித்துள்ளது. பிரிட்டனில் உள்ள கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களில் 60 சதவீதத்திலிருந்து 70 சதவீதம் வரையிள்ள மாணவர்கள் முகவர்கள் மூலமே செல்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். பிரிட்டனில் படிக்கச் செல்லும் இந்திய மாணவர்களுக்கு தரமான சேவை வழங்கும் வகையில் அதற்கான முகவர்களுக்கு பயிற்சியை அளித்து சான்றிதழையும் வழங்கியுள்ளது பிரிட்டிஷ் கவுன்சில். சிறப்பிடம் பெற்ற முகவர்களுக்கு பிரிட்டிஷ் தூதரக விசா சேவைப் பிரிவு துணை இயக்குநர் லிண்டா ஸ்மித் சான்றிதழ்களை வழங்கினார்.