உள்ளூர் செய்திகள்

குறைந்த ஊழியருடன் நிறைந்த பணி: விப்ரோ திட்டம்

இந்தியாவின் பிரசித்தி பெற்ற நிறுவனங்களுள் ஒன்றாக விப்ரோ இயங்குவது நாம் அறிந்ததே. அமெரிக்காவில் துவங்கிய நிதி நெருக்கடி தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. குறிப்பாக ஐ.டி., கம்பெனிகளை இப்பிரச்னை வெகுவாகப் பாதித்துள்ளது. இதன் காரணமாக ஐ.டி., நிறுவனங்கள் செலவுகளைக் குறைக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளன. விப்ரோ நிறுவனம் வழக்கத்தைவிட குறைவான எண்ணிக்கையிலேயே புதிய பணி நியமனங்களைச் செய்துள்ளது. புகழ்பெற்ற ஐ.டி., நிறுவனங்களான இன்போசிஸ், டி.சி.எஸ்., நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது விப்ரோ குறைந்த பணி நியமனங்களைச் செய்திருப்பது அதன் நிதிநிலை அறிக்கையிலிருந்து தெளிவாகியுள்ளது. பொதுவாக வருமானத்தை அதிகரிக்க வழியில்லாத நிலையில் செலவினங்களைக் குறைப்பதையே நிறுவனங்கள் கையாளுகின்றன. ஊழியருக்கு வழங்கப்படும் சம்பளங்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம் சந்தையில் நிலைத்து நிற்கும் யுக்தியை தற்போது விப்ரோ கையாளத்துவங்கியுள்ளது. தற்போது இந்த நிறுவனம் லாபத்தை தனி ஊழியரின் எண்ணிக்கைக்கு தொடர்புபடுத்தி திட்டம் வகுத்து வருகிறது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 11 ஆயிரத்து 321 ஊழியர்களைப் பணியிலமர்த்திய விப்ரோ இந்த ஆண்டு 1895 ஊழியர்களை மட்டுமே பணியில் அமர்த்தியுள்ளது. இது தவிர ஊழியர் பயன்பாட்டு விகிதமும் 80 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இப்படி தீவிர மனிதவள மாதிரியில் இயங்குவதன் மூலம் விப்ரோ செயல்பட்டதன் மூலம் அந்நிறுவனத்தின் வருவாயும், லாபமும் இந்த காலாண்டில் அதிகரித்து வருவதாகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்