உள்ளூர் செய்திகள்

டிவியை தவிர்த்தால் சாதிக்கலாம்...ஜெயிக்க போகும் மாணவர்களின் டிப்ஸ்

பத்தாம் வகுப்பு: என்.காளீஸ்வரி, காரைக்குடி மு.வி.,அரசு மேல்நிலைப்பள்ளி:கணிதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து படிப்பேன். பள்ளி, டியூசன் நேரங்கள் தவிர்த்து தினமும் காலை 7 மணி முதல் 9 மணி, மாலை 4 மணி முதல் 6 மணி வரை படிப்பேன். ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி பெற வேண்டும் என்பது லட்சியம்.கிருத்திகா, கோட்டையூர் சிதம்பரம் செட்டியார் மகளிர் மேல் நிலைப்பள்ளி: அதிகாலை 4 மணிக்கு எழுந்து படிப்பேன். அறிவியலுக்கு முக்கியத்துவம் கொடுத்து படிக்கிறேன். மருத்துவ துறையில் படித்து ஏழைகளுக்கு சேவை செய்வேன். எனது லட்சியத்திற்கு தினமலர் ஜெயித்துக்காட்டுவோம் உறுதுணையாக உள்ளது.பவானி மணியம்மை, காரைக்குடி ஸ்ரீமீனாட்சி மகளிர் மேல் நிலைப்பள்ளி: உயிரியல் பாடத்தில் அதிக ஆர்வம் உண்டு. அதிகாலை 4 மணிக்கு எழுந்து படிப்பேன். ஆசிரியர்கள் நடத்தும் பாடத்தை அடிக்கடி எழுதி பார்ப்பதால் எளிதில் விடைகள் மனதில் பதிகிறது.நத்தர் உசேன், புதுவயல் ராமநாதன் செட்டியார் மேல் நிலைப்பள்ளி:அதிகாலை 4.30 மணி முதல் 6 மணி, இரவு 9 மணி முதல் 10 மணி வரை படிப்பேன். அன்றைய பாடத்தை அன்றைக்கே படித்து விடுவேன். எனது தந்தை இறந்தவிட்ட போதும், தாய் எல்லா விதத்திலும் உறுதுணையாக உள்ளார். அறிவியலில் ஆர்வமுடன் படிப்பேன். டாக்டராகி ஏழைகளுக்கு சேவை செய்வேன் .மணிவண்ணன், காரைக்குடி அழகப்பா மாதிரி மேல் நிலைப்பள்ளி:கணிதத்தை விருப்பத்துடன் படிப்பேன். அதிகாலை 4 மணி முதல் 6 மணி, இரவு 7 மணி முதல் 10 மணி வரை படிப்பேன். பழைய வினாத்தாட்களை சேகரித்து விடையளித்து வருகிறேன். பாடத்தை அன்றைக்கே படித்து, கேள்விகளுக்கு விடை எழுதி பழகுவேன்.  டாக்டராவது லட்சியம்.பிளஸ் 2 மாணவர்கள்:காயத்ரி, காரைக்குடி அழகப்பா மெட்ரிக்., மேல் நிலைப்பள்ளி:இயற்பியல், வேதியியல்,கணித பாடத்தை விரும்பி படிப்பேன். நண்பர்களுடன் குழுவாக சேர்ந்து படித்து வருகிறேன். விஞ்ஞானியாக  வேண்டும் என்பது லட்சியம்.மோனிகா காத்ரீன், தேவகோட்டை துவயமரியன்னை பெண்கள் மேல் நிலைப்பள்ளி:எனக்கு பிடித்த பாடம் கணிதம், இயற்பியல். ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து படிப்பேன். பெற்றோர் உதவியால் பாடங்களை அன்றே படித்து முடித்து விடுவேன். டிவி பார்ப்பதே கிடையாது.மீனாட்சி, காரைக்குடி மு.வி.,அரசு மேல் நிலைப்பள்ளி:அன்றைய பாடத்தை அன்றே படித்து கேள்விகளை தயார் செய்து எழுதி பார்ப்போம். வேதியியல், இயற்பியல் பாடம் பிடிக்கும். டிவி பார்ப்பதை தவிர்த்தால் அனைத்து மாணவர்களும் சாதிக்கலாம்.அன்புச்செல்வன், திருப்புத்துவர் ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் அரசு மேல் நிலைப்பள்ளி:கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பதில் ஆர்வம் அதிகம். படிக்கும் போது எந்தவித சிந்தனைக்கும் இடம் கொடுக்காமல் நிதானமாக படிப்பேன் திருஞானம், காரைக்குடி அழகப்பா மெட்ரிக்., மேல் நிலைப்பள்ளி:கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களை ஆர்வமுடன் படிப்பேன். படிப்பு ஒன்று தான் நமது லட்சியம் என்ற குறிக்கோளோடு படித்து வருகிறேன். இந்த லட்சியத்தை அடைய இன்னும் உழைக்கவேண்டும் என்பதற்காக கேள்விக்கான விடைகளை எழுதி பயிற்சி பெறுகிறேன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்