உள்ளூர் செய்திகள்

இந்திய வம்சாவளி நிபுணர்களுக்கு அமெரிக்க நிறுவன விருது

வாஷிங்டன்: கணிதம் மற்றும் அறிவியலில் ஆய்வு மேற்கொண்ட, இந்திய வம்சாவளியை சேர்ந்த நான்கு பேருக்கு, அமெரிக்க நிறுவனத்தின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்க நிறுவனமான, "சிமென்ஸ்" ஆண்டுதோறும், கணிதம் மற்றும் அறிவியல் துறையில் சாதனை படைத்தவர்களுக்கு விருதும், ரொக்கப் பரிசும் வழங்கி கவுரவித்து வருகிறது. இவ்வகையில், இந்த ஆண்டு, நான்கு இந்தியர்கள் உட்பட, 13 பேருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. கணிதத் துறையில் ஆய்வு மேற்கொண்டதற்காக, ஸ்டேன்போர்டு பல்கலைக்கழக பேராசிரியர், கண்ணன் சவுந்தர்ராஜனுக்கும், பென்சில்வேனியா பல்கலைக்கழக பேராசிரியர், ராஜீவ் அலூருக்கும் விருது வழங்கப்பட்டுள்ளது. இது தவிர, கணினி அறிவியலில் கணிதத்தின் பயன்பாடு பற்றிய பாடப்பிரிவில் வல்லவரான, சலீல்வதான், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் துணைப் பேராசிரியராக பணியாற்றுகிறார். கணினி அறிவியில் இவர் மேற்கொண்ட சிறந்த ஆய்வை பாராட்டி, இவருக்கும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. கான்பூர் ஐ.ஐ.டி.,யில் பட்டம் பெற்று, ஏல் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ள செந்தில், இயற்பியல் துறை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இயற்பியலில் இவருடைய ஆய்வை பாராட்டி, சிமென்ஸ் நிறுவனம் இவருக்கு விருது வழங்கி கவுரவித்துள்ளது. இவர்கள் அனைவருக்கும், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, தலா, 60 லட்சம் ரூபாய், "ஸ்காலர்ஷிப்" வடிவில் வழங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்