அறிவியல் கண்காட்சி: பள்ளி மாணவன் அபார சாதனை
ராசிபுரம்: மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில், ராசிபுரம் பள்ளி மாணவன் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். திருச்செங்கோடு செங்குந்தர் இன்ஜினியரிங் கல்லூரியில், நாமக்கல் மாவட்ட அளவில், வீட்டுக்கொரு விஞ்ஞானி என்ற தலைப்பில், அறிவியல் கண்காட்சி நடந்தது. அதில், ராசிபுரம் எஸ்.ஆர்.வி., எக்ஸல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த பிளஸ் 2 மாணவர் ஆதர்ஷ் உருவாக்கிய, அனைத்து தட்ப வெப்ப நிலைகளிலும், குறைந்த மின்சாரத்தில், சிறப்பாக இயங்ககூடிய ஏ.சி., இடம்பெற்றிருந்தது. அந்த படைப்பு, சீனியர் பிரிவில், மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தது. அதையடுத்து, மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவர் ஆதர்ஷ்க்கு, ரொக்கப் பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது. சாதனை படைத்த மாணவர் ஆதர்ஷை பள்ளி நிர்வாகிகள், பெற்றோர் அனைவரும் பாராட்டினர்.