உள்ளூர் செய்திகள்

ஐ.ஐ.டி.,யில் பிஎச்.டி., படித்தவர்களுக்கு இன்டர்வியூ இல்லாமல் வேலை!

பிஎச்.டி., படித்தவர்களை நேரடியாக வேலைக்கு ஈர்க்கும் வகையிலும் பிஎச்.டி., படிக்க மாணவர்களை ஊக்குவிக்கும் வகையிலும்  அவர்களை நேரடியாகத் தேர்வு செய்ய டாடா கன்ஸல்டன்சி சர்வீசஸ் (டி.சி.எஸ்.,) முடிவு செய்துள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஐ.ஐ.டி.களுக்கு பிஎச்.டி., படித்த மாணவர்களுக்கு வேலைக்குத் தேர்வு செய்ய இன்டர்வியூ இருக்காது. நேரடியாக அவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று டி.சி.எஸ்., நிர்வாக இயக்குநர் எஸ். ராமதுரை தெரிவித்தார். சென்னை ஐ.ஐ.டி.,யில் நடைபெற்ற மாநாட்டில் குழு விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய அவர் இத்தகவலைத் தெரிவித்தார். பல்வேறு கல்வி நிறுவனங்களிலிருந்து ஏற்கெனவே சில நூறு பிஎச்.டி., படித்தவர்களை ஏற்கெனவே வேலைக்குத் தேர்வு செய்துள்ளோம். ஒவ்வொரு ஆண்டும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவில் எத்தனை பிஎச்.டி., மாணவர்கள் தேர்ச்சி பெறுகிறார்களோ அவர்களில் எவ்வளவு பேரை தேர்வு செய்ய முடியுமோ அவ்வளவு பேரைத் தேர்வு செய்வோம் என்றும் அவர் குறிப்பிட்டார். அடுத்த பதினைந்து ஆண்டுகளில் 2 கோடி கல்லூரி பட்டதாரிகளையும் 5 கோடி பல்வேறு தொழில்துறையாளர்களையும் கொண்டு நமது நாடு திகழும். உலகிலேயே தலைசிறந்த முதல் 500 நிறுவனங்களில் 30 சதவீத நிறுவனங்கள் இந்தியாவிலேயே இருக்கும். உலக வர்த்தகத்தில் 10 சதவீதம் இந்தியாவுடையதாக இருக்கும் என்று மேலாண்மைக் கல்வி ஆசிரியர் சி.கே. பிரகலாத். உலக அளவிலான நிதி நெருக்கடி சூழ்நிலையில் இந்தியா மேலும் வலுவடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்