உள்ளூர் செய்திகள்

திருக்குறளுக்கு தேசியவிருது பெற்ற சிறுமி கம்ப்யூட்டரில் உலகசாதனை!

மதுரை: மதுரையை சேர்ந்த எட்டு வயது மாணவி, உலகிலேயே மைக்ரோசாப்ட் கம்ப்யூட்டர் புரொபஷனல் (எம்.சி.பி.,) சான்றிதழ் பெற்ற இளம் சிறுமி என்று பெயர் பெற்றுள்ளார். டால்பின் மெட்ரிகுலேஷன் பள்ளியைச் சேர்ந்த லிவினா ஸ்ரீ என்ற மாணவி மைக்ரோசாப்ட் நிறுவனம் நடத்திய கம்ப்யூட்டர் (எம்.சி.பி.,) தேர்வில் ஆயிரத்திற்கு 842 மதிப்பெண் பெற்றுள்ளார். இதற்கு முன்பு, 2005ல் பாகிஸ்தானைச் சேர்ந்த ஹர்பக்ரீம் ரந்தஹா என்ற மாணவி தனது 10வது வயதில் எம்.சி.பி., பட்டத்தை பெற்றார். பொதுவாக, எம்.சி.பி., தேர்வு 20 முதல் 25 வயது வரையிலான பட்டதாரிகளுக்கு மட்டுமே நடத்தப்படும். ஆனால், சிறுமியின் திறமையால் எட்டு வயதிலேயே இத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார். இதன்மூலம், சிறுமி லிவினா ஸ்ரீம், லிம்கா புத்தகத்தில் இடம் பெற உள்ளார். இச்சிறுமி தனது 3 வயதிலேயே 1330 குறள்களையும் ஒப்பித்து தேசிய விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்