உள்ளூர் செய்திகள்

கல்வியை சமூக முன்னேற்றத்திற்கு பயன்படுத்த அறவாணன் அறிவுரை

மயிலம்: மாணவர்கள் கல்வி அறிவை சமூக முன்னேற்றத்திற்கு பயன்படுத்த வேண்டும் என முன்னாள் துணைவேந்தர் க.ப. அறவாணன் பேசினார். விழுப்புரம் மாவட்டம் மயிலம் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ் கலை அறிவியல் கல்லூரி, அனைத்திந்திய ஆராய்ச்சிக் கழகம் சார்பில் இரண்டு நாள் கருத்தரங்கம் கல்லூரி வளாகத்தில் நடந்தது. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் க.ப. அறவாணன் விழிகள், பார்வைகள் என்ற நூல்களை வெளியிட்டு பேசியதாவது:மாணவர்களுக்கு கற்றல், கற்பித்தல் மிக முக்கியமானது. கல்வி கற்றால் வாழ்வில் அனைத்து  வெற்றிகளையும் பெற முடியும்.  ஜப்பான் நாட்டில் ஜென் கதையில் சிந்தனையற்றவர்கள் உலகை முட்டாள் உலகம், நரகம் எனக் கூறுகின்றனர். மாணவர்கள் அதிகம் சிந்திக்க வேண்டும். கற்ற கல்வி அறிவு பிறருக்கும் பயன்படும் வகையில் நல்ல கட்டுரைகள் எழுத முன்வர வேண்டும். மலர்கள் எப்படி மனம் பரப்புகின்றனவோ அது போல நாம் மற்றவர்களுக்கு உதவ முன் வரவேண்டும். கடந்த நூறு ஆண்டுகளில் பல பல்கலைகழகங்கள் நமது நாட்டில் தோன்றியுள்ளன. இவற்றினால் கல்வி கற்றவர்கள் அதிகமாக உருவாக்கப்பட்டனர். மாணவர்கள் தாங்கள் பெற்றக் கல்வி அறிவை இந்த சமூகம் முன்னேற பாடுபட வேண்டும். இவ்வாறு க.ப. அறவாணன் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்