உள்ளூர் செய்திகள்

அறுவை சிகிச்சைக்கு உதவி கேட்கும் மாற்றுத்திறனாளி மாணவர்

நாமக்கல்: நாமக்கல் மாற்றுத் திறனாளி மாணவர் ஒருவர் அறுவை சிகிச்சைக்கு உதவி கேட்டுள்ளார். நாமக்கல் அடுத்த பொன்விழா நகரை சேர்ந்த கூலித்தொழிலாளி நந்தகுமார், 42, இவரது மனைவி விஜயகுமாரி, மகள் மகாலட்சுமி, மகன் லோகேஷ், 14, மாற்றுத்திறனாளி. இவர் தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பில் படித்து வருகிறார். லோகேஷ் தந்தை நந்தகுமார், தனது மகன் குறித்து கூறியதாவது: கடந்த 2000ம் ஆண்டு மார்ச் 10ம் தேதி நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் லோகேஷ் பிறந்தான். அப்போது வலது கையில் செயல் குறைவு ஏற்பட்டு, கால்களும் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இருந்தும், நம்பிக்கையுடன் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்தோம். 2007ம் ஆண்டு நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் இரண்டு குதிகால்களும் தரையில் மட்டமாக படியும் வகையில் ஆப்ரேசன் செய்து ஓரளவு நடக்கும்படி செய்தோம். மற்ற மாணவர்களை போல் நேராக நடக்க சிரமமாக உள்ளதால் பிசியோதெரபி சிகிச்சையும் அளித்து வருகிறோம். தொடர்ந்து அதிகளவு மருத்துவ செலவு ஆவதால், கோவையில் உள்ள தனியார் நரம்பு மற்றும் எலும்பு பாதிப்பு தொடர்பான சிறப்பு மருத்துவமனையில், கடந்த மாதம் மருத்துவ குழுவினருடன் ஆலோசனை நடத்தினோம். அப்போது டாக்டர்கள் கூறுகையில், "சிறுவனின் இரண்டு கால்களின் பின்புறம், தலா மூன்று இடங்களில் ஆப்ரேசன் செய்ய வேண்டும். அதிகபட்சம் ஒரு லட்சம் ரூபாய் செலவாகும் என கூறினர். என்னால் ஒரு லட்சம் ரூபாய் வரை செலவு செய்து மருத்துவம் பார்க்க முடியாத நிலையில் உள்ளேன். அரசின் காப்பீடு திட்ட விதிமுறையின்படி சிகிச்சை வழங்க முடியாது என டாக்டர்கள் தெரிவித்துவிட்டனர். எனவே எனது மகனின் கால்கள் சீராக நடப்பதற்காக தங்களால் முடிந்த உதவியை செய்ய வேண்டுகிறேன். லோகேஸ் மாற்றுத்திறனாளியாக இருந்தாலும், பல்வேறு குழுப்போட்டியில் மாவட்ட அளவில் சாதனை நடத்தியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார். தொடர்புக்கு: 94429 05647.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்