உள்ளூர் செய்திகள்

புள்ளியியல் துறை படிப்பில் மாணவர் சேர்க்கை துவக்கம்

திருச்சி: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முதுகலை புள்ளியியல் துறையில், ஜூலை 31ம் தேதி வரை சேர்க்கை நடைபெறுகிறது. கடந்த 2011ம் ஆண்டு ஃபிப்ரவரி மாதம் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் புள்ளியியல் துறை தொடங்கப்பட்டது. இரண்டு ஆண்டு முதுநிலை எம்.எஸ்.சி., புள்ளியியல் பட்டபடிப்புக்கு பி.எஸ்.சி. புள்ளியியல், கணிதம், கம்ப்யூட்டர் அறிவியல் (புள்ளியியல், கணிதம் ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும்) பி.சி.ஏ., கம்ப்யூட்டர் பயன்பாட்டியியல் (புள்ளியியல், கணிதம் ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும்). மத்திய அரசின் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., மாநில அரசின் புள்ளியியல் துறை துணை இயக்குநர், மாவட்ட புள்ளியியல் துறை அதிகாரி மற்றும் பொது மற்றும் தனியார் துறைகள், தொழிற்சாலை, தகவல் தொழில்நுட்பம், வங்கித்துறை வேலை வாய்ப்புகள், கல்வி மற்றும் ஆராய்ச்சித்துறை பணியிடங்களில் பணியாற்றலாம். முதுகலை புள்ளியியல் துறை படிப்பில் சேர்க்கைக்கு ஜூலை 31ம் தேதி கடைசி நாள். ஆர்வமுள்ளவர்கள் துறைத் தலைவர், புள்ளியியல் துறை, பாரதிதாசன் பல்கலைக்கழகம், காஜாமலை வளாகம், திருச்சி, என்ற முகவரி மற்றும் 94444 69629 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளவும் என பல்கலை பதிவாளர் அறிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்