உள்ளூர் செய்திகள்

ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த பல்கலை அலுவலர்கள் வேண்டுகோள்

ஈரோடு: மாநில மாநாட்டு கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி பல்கலைக்கழக அலுவலர் சங்கத்தினர் கலெக்டரிடம் மனு அளித்தனர். தமிழ்நாடு அனைத்து பல்கலைக்கழக அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கலெக்டர் சண்முகத்திடம் வழங்கிய மனுவில் கூறியதாவது: கடந்த 2013ம் ஆண்டு வரை நியமிக்கப்பட்ட ஊழியர், ஆசிரியர்களுக்கு பணி உத்தரவாதம் அளிக்கும் வகையில் பிளாக் கிராண்ட்டை உயர்த்தி வழங்க வேண்டும். தமிழக அரசு கட்டுப்பாட்டில் உள்ள பல்கலை ஆட்சி மன்றம் மற்றும் ஆளவை மன்றங்களில் ஆசிரியரல்லாத ஊழியர்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும். பல்கலையில் பணிபுரியும் அனைவரும் 60 வயது வரை பணிபுரிய வழிவகை செய்ய வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். உயர் பதவிகளுக்கு புதிதாக கல்வி தகுதியை நிர்ணயம் செய்யும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் மாநில மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. அக்கோரிக்கை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என மனு மூலம் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்