தமிழகத்தில் தொழில் கல்வி மையம் அமைக்க முடிவு
புதுடில்லி: "தமிழகம் உட்பட எட்டு மாநிலங்களில் மண்டல தொழில் கல்வி பயிற்சி மையம் அமைக்கப்படும்" என மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறினார். ராஜ்யசபாவில் கேள்வி நேரத்தின்போது நேற்று அவர் கூறியதாவது: நாடு முழுவதும் எட்டு இடங்களில் மண்டல அளவிலான தொழில் கல்வி பயிற்சி மையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. தமிழகம், இமாச்சல், பஞ்சாப், திரிபுரா, கோவா, உத்தரகண்ட், பீகார், ஜம்மு - காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் இந்த தொழில் கல்வி மையங்கள் அமைக்கப்படும். இதற்காக நிலங்களை கையகப்படுத்தும் பணி துவங்கியுள்ளது. வரும் 2017 முதல் இந்த தொழில் கல்வி மையங்கள் செயல்படத் துவங்கும். இவ்வாறு அவர் கூறினார்.