உள்ளூர் செய்திகள்

மாணவர் சிறப்பு பஸ்களை மறுஆய்வு செய்ய உத்தரவு

புதுச்சேரி: மாணவர் சிறப்பு பஸ்களை மறுஆய்வு செய்ய பள்ளி கல்வித்துறை இயக்குநர் வல்லவன் உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரியில், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களை ஏற்றிச் செல்லும், கல்வி நிறுவன வாகனங்களை, போக்குவரத்து துறையினர் ஆண்டுதோறும் ஆய்வு செய்து, சான்று அளித்து வருகின்றனர். கடந்த மே மாதம், கல்வி நிறுவன வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இந்நிலையில், அரும்பார்த்தபுரம் தக்ககுட்டை அருகே, நேற்று அரசு பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற மாணவர் சிறப்பு பஸ்சின் கதவு திறந்து, 5 மாணவிகள் காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து, கல்வித் துறையில் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்படும், மாணவர் சிறப்பு பஸ்கள் அனைத்தும், போக்குவரத்து துறை அதிகாரிகளின் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதா அல்லது சோதனைக்கு செல்லாமல் இயக்கப்படுகிறதா என்பதை, கல்வித்துறை அதிகாரிகள், போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் இணைந்து மறு ஆய்வு செய்யுமாறு, பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் வல்லவன் உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்