அரசு பள்ளிகளை ஊக்குவிக்க கேடயம் வழங்க ஏற்பாடு
சிவகங்கை: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2வில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளை ஊக்குவிக்க, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் முன்னிலையில் கேடயம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பத்தாம் மற்றும் பிளஸ்2 பொதுத்தேர்வுகளில் 70 சதவீதத்திற்கு குறைவான தேர்ச்சி விகிதம் பெற்ற அரசு பள்ளிகளுக்கான கலந்தாய்வு கூட்டம் 3 மண்டலமாக பிரித்து, ஆக.,13 முதல் செப்.,1 வரை நடக்கிறது. பள்ளிக்கல்வி அமைச்சர், கல்வித்துறை அதிகாரிகள், தலைமை ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர். இந்த ஆய்வு கூட்டத்தில் தமிழக அளவில் இரு தேர்விலும் 100 சதவீத தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளை ஊக்குவித்து, சிறப்பு கேடயம் வழங்க பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.