உள்ளூர் செய்திகள்

கேந்திர வித்யாலயா பள்ளி மாணவியருக்கான தடகள போட்டிகள்

மதுரை: மதுரையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கேந்திர வித்யாலயா பள்ளி மாணவியருக்கான தடகள போட்டிகள் ரேஸ்கோர்சில் துவங்கின. பிராந்திய துணை கமிஷனர் சலீம் போட்டிகளை துவக்கி வைத்தார். மாவட்ட தகவல் அலுவலர் மைக்கேல் ராஜ், மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன் முன்னிலை வகித்தனர். நரிமேடு பள்ளி முதல்வர் முத்தையா, தலைமையாசிரியர் முருகன், திருப்பரங்குன்றம் பள்ளி முதல்வர் கீதா குமாரி, உடற்கல்வி இயக்குனர் பன்னீர்செல்வன் பங்கேற்றனர். 37 பள்ளிகளில் இருந்து 200 மாணவியர் பங்கேற்றனர். நாளை வரை போட்டிகள் நடக்கின்றன. முதல் நாளில் வென்றவர் விவரம்: மதுரை நரிமேடு பள்ளி மாணவிகள் (17 வயதிற்கு உட்பட்டவர்) ராமஜெயம் 800 மீ., ஓட்டத்தில் முதலிடம், வட்டு எறிதல் மற்றும் குண்டு எறிதலில் காருண்யா முதலிடம் வென்றனர். 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவு: 800 மீ., ஓட்டத்தில் ஊட்டி பள்ளி மாணவி அன்னி டொரிட்டா, நீளம் தாண்டுதலில் திருச்சி பள்ளி மாணவி ஆர்த்தி மோனிகா, டிரிபிள் ஜம்ப்பில் நரிமேடு பள்ளி மாணவி அக்ஷயா முதலிடம் வென்றனர். இப்பிரிவில் சங்கிலி குண்டு எறிதலில் சென்னை அசோக்நகர் பள்ளி மாணவி அக்ஷயா, ஈட்டி எறிதலில் நெல்லை விஜய நாராயணம் பள்ளி மாணவி ஜீவிதாராய் முதலிடம் வென்றனர். 400 மீ., ரிலே போட்டியில் ஊட்டி பள்ளி முதலிடம் பிடித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்