உள்ளூர் செய்திகள்

ஐ.ஐ.எம்.,களுக்கு தேசிய முக்கியத்துவ கல்வி நிறுவன அந்தஸ்து?

புதுடில்லி: மேலாண்மை படிப்புகளுக்கு, இந்திய அளவில் பெயர்பெற்ற ஐ.ஐ.எம்., கல்வி நிறுவனங்கள், விரைவில், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்கள் என்ற அந்தஸ்தைப் பெறவுள்ளன. இதுதொடர்பான மசோதா, நாடாளுமன்றத்தில் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக கூறப்படுவதாவது: மத்திய மனிதவள அமைச்சகத்திற்கும், ஐ.ஐ.எம்.,களுக்கும் இடையே முதற்கட்ட கலந்துரையாடல் நடைபெற்றபோது, மசோதாவின் முதல் வரைவு தயாரானது. நிபுணர்களின் ஆலோசனையின் அடிப்படையிலேயே இது தயாரானது. அதையடுத்து, குறுகிய காலத்தில், இறுதி மசோதாவிற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனையடுத்து, இந்த மசோதா, நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கலாகும். இவ்வாறு தெரிவிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்