உள்ளூர் செய்திகள்

மாணவர்கள் இடையே திருக்குறள் ஒப்புவித்தல், பேச்சு போட்டி

திருத்தணி: மங்கலக்கீழாரின் நினைவு நாள் முன்னிட்டு, முருகன் கோவில் சார்பில், மாணவர்கள் இடையே திருக்குறள் ஒப்புவித்தல், பேச்சு போட்டி நேற்று நடந்தது. திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோவிலின் உபகோவிலான மாணிக்கவாசகர் மடாலயம் குருவராஜபேட்டையில் உள்ளது. இங்கு, நேற்று தமிழ் மாமூனிவர் மங்கலக்கீழாரின் 61வது நினைவு நாளை முன்னிட்டு, பள்ளி மாணவ, மாணவியர் இடையே திருக்குறள் ஒப்புவித்தல், பேச்சு போட்டி நடந்தது. இதில், திருத்தணி, அம்மையார்குப்பம், மின்னல், குருவராஜபேட்டை, திருமால்பூர், அரக்கோணம், வாலாஜா ஆகிய பள்ளிகளில் இருந்து மொத்தம் 70 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். இதில், வெற்றி பெற்றவர்களுக்கு முருகன் கோவிலின் தக்கார் ஜெய்சங்கர், சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்