ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
சிவகங்கை: வீரப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி தலைமை ஆசிரியர் லட்சுமணன் ஏற்பாட்டில் நடந்தது. மாணவ, மாணவியர் மூலிகை தாவரங்கள், வனவிலங்கு பாதுகாப்பு, மழை நீர் சேகரிப்பு கண்காட்சியில் வைத்து இருந்தனர். ஆசிரியர்கள் அருளானந்தம், ஆயிஷாபீவி, டெய்சி, ஷீலாப்பிரியா, கல்வி குழு தலைவர் நாகலிங்கம், பள்ளி மேலாண்மை குழு தலைவர் சின்னம்மாள் மற்றும் பலர் பங்கேற்றனர்.