மாநில சிலம்பப் போட்டிக்கு உடுமலை மாணவர்கள் தேர்வு
உடுமலை: உடுமலை, வித்யநேத்ரா பள்ளி மாணவ, மாணவியர், மாநில அளவிலான சிலம்ப போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கோவை கலைவாணி பொறியியல் கல்லூரியில், மண்டல அளவிலான சிலம்ப போட்டிகள் நடந்தன. இதில், உடுமலை, வித்யநேத்ரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். 14 வயதினருக்கான, 35 முதல் 40 எடை பிரிவில், மாணவன் ஹரிஸ் ஆதித்யா முதலிடம், 20 முதல் 25 எடை பிரிவில் மாணவி கோகிலவாணி இரண்டாமிடம், 25 முதல் 30 எடை பிரிவில் மாணவி மிருதுளா மூன்றாமிடம் பெற்றனர். வெற்றிபெற்ற மாணவ, மாணவியர் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.