உள்ளூர் செய்திகள்

தேசிய அளவில் பெண்களுக்கான கபடி போட்டி தேர்வு

கோவை: சூலுார் கபடி கிளப் மற்றும் கோவை மாவட்ட கபடி கிளப் சார்பில், திருச்சி ரோடு, கல்லுக்குழி மைதானத்தில், தேசிய அளவில் பெண்களுக்கான கபடி போட்டி தேர்வு, டிச., 5ல் துவங்குகிறது. மூன்று நாட்கள் தொடர்ந்து நடக்கும், 41வது தமிழ்நாடு ஜூனியர் சாம்பியன்ஷிப் கபடிப் போட்டியில் (மகளிர்), மாநில அளவில் வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனர். 32 மாவட்டங்களை சேர்ந்த 32 அணிகள் போட்டிகளில் பங்கேற்கின்றன. இந்த 320 வீராங்கனைகளில், 12 வீராங்கனைகள் தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்படுவர். இவர்கள், டிச., மாதம் இறுதியில், கேரளா மாநிலம், காசர்கோட்டில் நடக்கவிருக்கும் அகில இந்திய சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துக்கொள்ள அனுமதிக்கப்படுவர். மேலும், மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்