உள்ளூர் செய்திகள்

பல மாதங்களாக பூட்டிக் கிடக்கும் தன்னார்வ பயிலகம்

இளையான்குடி: இளையான்குடியில் தன்னார்வ பயிலகம் மூடிக்கிடப்பதால் மாணவர்கள் போட்டித் தேர்வுகளுக்கு தயாராவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இளையான்குடியில், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் பேரூராட்சி அலுவலகத்தின் ஒரு அறையில் பல ஆண்டுகளுக்கு முன்பு தன்னார்வ பயிலகம் துவங்கப்பட்டு செயல்பட்டு வந்தது. அரசு வேலை வாய்ப்புக்காக நடத்தும் போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் தங்களுக்கு வேண்டிய புத்தகங்களை படித்து தேர்வு எழுதினர். தன்னார்வ பயிலகம் செயல்பட்டு வந்த அறை பேரூராட்சி பயன்பாட்டிற்கு தேவைப்பட்டதால் தன்னார்வ பயிலகம் அங்கிருந்து அதே வளாகத்தில் பேரூராட்சி கட்டடத்தின் சிறிய அறைக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு மாற்றப்பட்டது. தற்போது தன்னார்வ பயிலகம் செயல்பட்டு வந்த அறை பல மாதங்களாக மூடி கிடக்கிறது. பூட்டிக்கிடக்கும் தன்னார்வ பயிலகத்தை திறப்பதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்