உள்ளூர் செய்திகள்

குவைத், ஓமன் நாடுகளில் பல்வேறு பணி வாய்ப்பு

சென்னை: குவைத் மற்றும் ஓமன் நாட்டில் பணிபுரிய, விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. குவைத் நாட்டில் உள்ள, இந்திய தொலை தொடர்புத் துறையில் பணிபுரிய, டிப்ளமோ தேர்ச்சியுடன், மூன்று ஆண்டுகள் அனுபவம் பெற்ற, சிவில் மேற்பார்வையாளர்கள்; எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன், ஐந்து ஆண்டுகள் பணி அனுபவம் உள்ள கொத்தனார்கள், சமையல்காரர்கள் தேவைப்படுகின்றனர். மேலும், தொடக்கப்பள்ளி தேர்ச்சியுடன், ஐந்து ஆண்டுகள் அனுபவம் பெற்ற தொழிலாளர்கள்; 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவத்துடன், 50 வயதிற்குட்பட்ட, குவைத் ஓட்டுனர் உரிமம் வைத்துள்ள, இலகு ரக, கனரக வாகன ஓட்டுனர்கள்; டிப்ளமோ தேர்ச்சியுடன், சிவில் பிரிவில், ஐந்து ஆண்டுகள் அனுபவம் பெற்ற, ஆட்டோகாட் இயக்குபவர் தேவைப்படுகின்றனர். ஓமன் நாட்டில் உள்ள மருந்தக நிறுவனத்திற்கு, ஆங்கிலப் புலமையுடன், டி.பார்ம் தேர்ச்சி, புரோமெட்ரிக் தேர்வு முடித்த, 26 முதல் 32 வயதிற்குட்பட்ட, ஆண் உதவி மருந்தாளுனர்கள் தேவைப்படுகின்றனர். விருப்பம் உள்ளவர்கள், 0442250 2267, 2250 5886 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்.  தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள, ஜி.வி.என்., கலைக்கல்லூரியில், வரும், 3ம் தேதி, தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன அரங்கம் இடம் பெற உள்ளது. இங்கு, தற்போதுள்ள பணிக் காலியிடங்களை அறிந்து கொள்வதுடன், விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள், உரிய கட்டணத்தை செலுத்தி, பதிவு செய்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்