இறகுபந்து ஒற்றையர் ஆட்டத்தில் மாணவி சிவதாரணி முதலிடம்
திருப்பூர்: மாநில அளவிலான இறகுபந்து ஒற்றையர் ஆட்டத்தில், மாணவி சிவதாரணி முதலிடம் பெற்றார். சிக்ஸ் ஸ்டார் பாட்மின்டன் அகாடமி சார்பில், சச்சின் கோப்பைக்கான இறகுபந்து போட்டி, சென்னையில் நடந்தது. மாநில அளவில், பள்ளிகள் இடையே நடந்த அப்போட்டியில், 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். 10 வயதுக்கு உட்பட்டோர் மாணவியர் பிரிவு ஒற்றையர் ஆட்டத்தில், திருப்பூர் செஞ்சுரி பவுண்டேசன் பள்ளி 3ம் வகுப்பு மாணவி சிவதாரணி முதலிடம் பெற்று, கோப்பையை தட்டிச் சென்றார்.