உள்ளூர் செய்திகள்

அம்பேத்கர் சர்வதேச மையத்திற்கு அடிக்கல் நாட்டும் முயற்சி

புதுடில்லி: டில்லியில் அம்பேத்கர் சர்வதேச மையம் அமைக்கும்படி, 25 ஆண்டுகளுக்கு முன் பரிந்துரைக்கப்பட்டிருந்தாலும், இப்போதுதான், அதற்கு அடிக்கல் நாட்டுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. சட்டமேதை அம்பேத்கரின் நுாற்றாண்டு விழாவை கொண்டாடுவதற்காக, 1990ல், மத்திய அரசு ஒரு குழுவை அமைத்தது. அப்போதைய பிரதமர் வி.பி.சிங், இந்த குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்த குழு, தலைநகர் டில்லியில், அம்பேத்கர் சர்வதேச மையத்தை அமைக்க வேண்டும். இதில், அம்பேத்கர் பெயரில், தேசிய அளவிலான ஒரு நுாலகம் இடம் பெறுவதோடு, அதில், முழு அளவிலான கட்டமைப்பு வசதிகளும் இடம் பெற வேண்டும் என, அந்த குழு பரிந்துரைத்தது. ஆனாலும், 25 ஆண்டுகளாக, சர்வதேச மையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில், டில்லி, லுாட்டின் பகுதியில், அம்பேத்கர் சர்வதேச மையத்தை அமைக்க, தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டும் விழா, இம்மாதம் 31ல் நடக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி, அடிக்கல் நாட்டுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்