மாவட்ட அளவிலான சப்-ஜூனியர் பாட்மின்டன் போட்டி
திருப்பூர்: மாவட்ட அளவிலான சப்-ஜூனியர் பாட்மின்டன் போட்டியில், மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்றனர். திருப்பூர் மோகன்ஸ் பாட்மின்டன் அகாடமியில், மாவட்ட அளவிலான சப்-ஜூனியர் பாட்மின்டன் போட்டி நடந்தது. தமிழ்நாடு இறகுப்பந்து கழக துணை மோகன்குமார் மேற்பார்வையில், ஒற்றையர் பிரிவில் நடந்த போட்டியை, இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் துவக்கி வைத்தார். போட்டி முடிவு 9 வயதுக்கு உட்பட்டோர் மாணவர் பிரிவில், தக்ஷின் 2-0 என்ற செட் கணக்கில், ரிபினேஷை வீழ்த்தினார். 11 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில், ரோகித்தை 2-0 என்ற செட் கணக்கில், அஸ்வந்த் ஹரீஷ் வென்றார். மாணவியர் பிரிவில், நேகாவுக்கு எதிரான போட்டியில், 2-0 என்ற செட் கணக்கில், சிவதாரிணி வெற்றி பெற்றார். 13 வயதுக்கு உட்பட்டோர் மாணவர் பிரிவில், ஸ்ரீராமை, 2-1 என்ற செட் கணக்கில் சைலேஷ் தோற்கடித்தார். மாணவியர் பிரிவில், வசுந்தராவை 2-0 என்ற செட் கணக்கில் காயத்ரி வீழ்த்தினார். 15 வயதுக்கு உட்பட்டோர் மாணவர் பிரிவில், சுஜித்துக்கு எதிராக களமிறங்கிய நிதின், 2-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். மாணவியர் பிரிவில், சிவப்பிரியா 2-0 என்ற செட் கணக்கில் ரஷ்மிகாவை வென்றார். 17 வயதுக்கு உட்பட்டோர் மாணவர் பிரிவில், யோகேஷ் 2-0 என்ற செட் கணக்கில் ஸ்ரீஹரியை வீழ்த்தினார். பதக்கம் பெறாதோர் பிரிவில், ஸ்ரீஹரியை எதிர்த்து விளையாடிய நரேஷ் ஆஷர், 2-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.