ஆண்கள் இறகுபந்து போட்டியில் இந்துஸ்தான் பல்கலை முதலிடம்
சோழிங்கநல்லுார்: நிகர்நிலை பல்கலை அணிகளுக்கான, ஆண்கள் இறகுபந்து போட்டியில், இந்துஸ்தான் பல்கலை அணி முதலிடம் பெற்றது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆதரவுடன், நிகர்நிலை பல்கலை அணிகளுக்கான, ஆண்கள் இறகுபந்து போட்டி, சோழிங்கநல்லுாரில் நடந்தது. அதில், இந்துஸ்தான் பல்கலை அணி முதலிடம் பெற்று, சாம்பியன் பட்டம் வென்றது. வி.ஐ.டி., பல்கலை அணி இரண்டாம் இடமும், எஸ்.ஆர்.எம்., பல்கலை அணி, மூன்றாம் இடமும் பெற்றன.