உள்ளூர் செய்திகள்

இணையதளத்தில் தேர்வு விண்ணப்பம்; கலைக் கல்லூரியில் அறிமுகம்

கோவை: கோவை அரசு கலைக் கல்லுாரியில் நவ., மாதம் நடைபெறவுள்ள அரியர் தேர்வு விண்ணப்பங்களை கல்லுாரி இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கும் முறை இவ்வாண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது; மாணவர்கள் இன்று முதல் செப்., 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை அரசு கலைக்கல்லுாரி யில், 21 இளங்கலை மற்றும், 23 முதுகலை படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. 4,500 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதுவரை, பருவத் தேர்வுகளில் தோல்வியடைந்த மாணவர்கள், கல்லுாரிகளில் நேரடியாக விண்ணப்பம் பெற்று, அரியர் தேர்வுகளுக்கு விண்ணப்பித்து வந்தனர். திருப்பூர், பொள்ளாச்சி, பழநி, தர்மபுரி, சேலம் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவர்கள், கல்லுாரிக்கு நேரடியாக வந்து விண்ணப்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது; மாணவர்களும் போக்குவரத்து சிரமங்களுக்கு உள்ளாகினர். இந்நிலையில், மாணவர்களின் நலன் கருதி, www.gacbe.ac.in என்ற கல்லுாரி இணையதளத்திலிருந்து 24., நடைபெறவுள்ள அரியர் தேர்வுக்கான விண்ணப்பங்களை இன்று முதல் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என, கல்லுாரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி புகழேந்தி கூறுகையில், மாணவர்களின் சிரமத்தை போக்கும் விதமாக, கல்லுாரி இணையதளத்தில் இருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, செப்., ௨௪ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வு கட்டணம் செலுத்திய ரசீதுடன், பூர்த்திசெய்த விண்ணப்பத்தை சமர்ப்பித்து உடனடியாக ஹால்டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம். தேர்வு விபரங்கள் அனைத்தும் கல்லுாரி இணையதளத்தில் இடம்பெற்றுள்ளதால், மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்