மருத்துவக் கல்லூரியில் முறைகேடு நடவடிக்கை எடுக்க புகார்
புதுச்சேரி: மாணவர் சேர்க்கையில் நிர்வாக ஒதுக்கீட்டில் தனியார் சுயநிதி மருத்துவ கல்லுாரியில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து கவர்னருக்கு புகர் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில மாணவர்கள், பெற்றோர்கள் நலச்சங்க தலைவர் பாலா, புதுச்சேரி கவர்னருக்கு அனுப்பிய புகார்:சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி நிர்வாக ஒதுக்கீட்டிற்கான இடங்களை, தேர்வு நடத்தி மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடத்த வேண்டும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. பிம்ஸ் மருத்துவக் கல்லுாரி நிர்வாக ஒதுக்கீட்டில் தேர்வில் வெற்றி பெற்ற தமிழகம் திருவாரூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம் குடவாசலை சேர்ந்த ரேஷ்மாவை சேர்க்க மறுப்பது குற்றசெயலாகும். அந்த மாணவியிடம் ரூ. 26 லட்சம் பணம் நன்கொடையாக நிர்வாகம் கேட்பது தவறானது. ரேஷ்மாவிற்கு இடம் தர மறுக்கும் பிம்ஸ் மருத்துவக் கல்லுாரி மீது புச்சேரி அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.