உள்ளூர் செய்திகள்

பட்டய கணக்கு மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு காத்து இருக்கு!

மதுரை: மதுரையில் தென்னிந்திய பட்டய கணக்கு மாணவர் கூட்டமைப்பு சார்பில், பட்டய கணக்கு மாணவர்களுக்கான தேசிய மாநாடு நடந்தது. மதுரை கிளை மேலாளர் மாரியப்பன் வரவேற்றார். டில்லி போர்டு ஆப் ஸ்டடீஸ் தலைவர் முரளி பேசியதாவது: இந்தியாவில் 2.50 லட்சம் பட்டய கணக்காளர்கள் உள்ளனர். இதனால், எதிர்காலத்தில் பட்டய கணக்கு மாணவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு உள்ளது. மற்ற படிப்புகளுக்கு அதிக பணம் செலவழிக்க வேண்டும். பட்டய கணக்கு படிப்பிற்கு அப்படியல்ல. வசதியில்லாத பெற்றோரும் தங்களது பிள்ளைகளை பட்டய கணக்கு படிக்க வைக்கலாம். இந்த தேர்வு மிகவும் எளிமையானது. ஆங்கிலம் பேச வேண்டும் என்பது முக்கியமல்ல. மாணவர்கள் தனித்திறமையை வளர்த்து கொள்ள வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் அவர்கள் திறமைமிக்க பட்டய கணக்காளர்களாக உருவாக முடியும், என்றார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று, ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர். சிறந்த ஆய்வு கட்டுரைக்கு பரிசு வழங்கப்பட்டது. மாபா நிறுவன தலைவர் பாண்டியராஜன் எம்.எல்.ஏ., ஐ.சி.ஏ.ஐ., மத்திய குழு உறுப்பினர் சந்தானகிருஷ்ணன், கூட்டமைப்பு துணைத் தலைவர் சிதம்பரம், தென்னிந்திய பட்டய கணக்கு மதுரை மண்டல செயலாளர் ஜெகதீஷ், துணை தலைவர் மிதுன், கிளை செயலாளர் ஜெகதீசன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்