உள்ளூர் செய்திகள்

பத்தாம் வகுப்பு துணைத்தேர்வுக்கு ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம்

பத்தாம் வகுப்பு துணைத்தேர்விற்கு விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள், தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. செப்., அக்டோபர் மாத பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு நாளை நடைபெறுகிறது. தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள், கடந்த 19ம் தேதி முதல் www.tndge.in என்ற இணையதளத்திலிருந்து தங்களது தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், இது நாள் வரை தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்யாமல் விடுபட்டுள்ள தனித்தேர்வர்கள் எவரேனுமிருப்பின் அவரின் நலன் கருதி, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தனித்தேர்வு எல்.எம்.எஸ்., பள்ளியில் நடக்கிறது. நாளை தமிழ் முதல் தாள், 29ம் தேதி தமிழ் இரண்டாம் தாள், 30ம் தேதி ஆங்கிலம் முதல் தாள், அக்., 1ம் தேதி ஆங்கிலம் இரண்டாம் தாள், 3ம் தேதி கணிதம், 5ம் தேதி அறிவியல், 6ம் தேதி சமூக அறிவியல் பாடத்திற்கும் தேர்வுகள் நடைபெறுகின்றன. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்