உள்ளூர் செய்திகள்

சேற்றில் புரண்ட மாணவர்கள்; மண் நாள் விழா

காரைக்குடி: உலக மண் நாள் இன்று. இதை முன்னிட்டு, காரைக்குடி மானகிரி செட்டிநாடு பப்ளிக் பள்ளி, கேரள மாநிலம் மஞ்சேரி ஸ்பிரிங் கான்டினெட்டல் பள்ளி மாணவர்கள், நேற்று சேற்றில் விளையாடி மகிழ்ந்தனர். பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட வயல்வெளி சேற்றில் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் விளையாடி மகிழ்ந்தனர். மாணவர்கள் ரெனா, நதாயின், அஸ்வந்தினி, நெல்சியா கூறும்போது: கண்மாயில் குளித்து, புழுதி மண்ணில் பெற்றோர், முன்னோர் புரண்டனர். எங்களுக்கு அந்த வசதி இல்லை. செருப்பு இல்லாமல் வெறுந்தரையில் நடந்தால் பூமியின் ஆற்றல் நமக்கு கிடைக்கிறது. இதை வலியுறுத்தி தான் பாத யாத்திரை மேற் கொள்கின்றனர். ஆனால், எங்கள் பாதங்கள் தரையில் படுவதில்லை. அதற்கான சூழலும் இல்லை. இதனால் தான் சீதோஷ்ண நிலை மாறினால் உடனே நோய் தொற்றுகிறது. இயற்கையோடு இணைய முடிவெடுத்து இந்த சேற்று நாளை இங்கு கொண்டாடுகிறோம். சிறந்த அனுபவமாக உள்ளது, என்றனர்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்