உள்ளூர் செய்திகள்

அரசு துவக்கப் பள்ளியில் கல்வி அலுவலர் விசாரணை

கூடலுார்: கூடலுார், குடோன் பாண்டியார் டான்டீயில் உள்ள அரசு துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் ராஜேஸ்வரி. இவர், பள்ளி மாணவர்களிடம், வேலை வாங்குவதாக புகார் எழுந்துள்ளது. இதை தொடர்ந்து, பெற்றோர் சிலர், நேற்று பள்ளிக்கு வந்து, ஆசிரியரிடம் கேட்டுள்ளனர். தலைமை ஆசிரியர், இந்த புகாரை மறுத்ததுடன், சிலர் திட்டமிட்டு தன்மீது புகார் தெரிவித்துள்ளனர் என, தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து வந்த, கூடலுார் உதவி தொடக்க கல்வி அலுவலர் பாலமுருகன், புகார் குறித்து பெற்றோரிடம் கேட்டறிந்தார். இந்த புகார் குறித்து, விசாரணை செய்து, தீர்வு காணப்படும் என, அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்