உள்ளூர் செய்திகள்

தலைவராக சவுகான்; எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள் கைது

புனே: புனேயில் உள்ள, திரைப்படக் கல்லுாரியின் தலைவராக, டிவி நடிகரும், பா.ஜ.,வை சேர்ந்தவருமான, கஜேந்திர சவுகான் நேற்று பொறுப்பேற்றார்.மஹாராஷ்டிரா மாநிலத்தில், முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தலைமையிலான, பா.ஜ., - சிவசேனா கூட்டணி அரசு உள்ளது. இங்குள்ள, புனே நகரில், எப்.டி.ஐ.ஐ., என்ற, இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கல்லுாரி உள்ளது. இந்த கல்லுாரியின் தலைவராக, டிவி நடிகரும், பா.ஜ.,வை சேர்ந்தவருமான கஜேந்திர சவுகானை, மத்திய அரசு நியமித்தது. இதற்கு, மாணவர்களில் ஒரு பிரிவினர், கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். மேலும், சவுகான் நியமனத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கடந்த ஆண்டில், 139 நாட்கள் தொடர் போராட்டமும் நடத்தினர். இந்நிலையில், திரைப்படக் கல்லுாரியின் தலைவராக, சவுகான் நேற்று காலை பொறுப்பேற்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டம் நடத்திய மாணவர்களை, போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்; 40 பேரை கைது செய்தனர். பொறுப்பேற்ற பின், சவுகான் கூறுகையில், பணியாற்றவே நாங்கள் வந்துள்ளோம்; எதிர்ப்பு பற்றி கவலையில்லை, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்