மாதா பொறியியல் கல்லூரியில் ஏரோநாட்டிகல் பிரிவுக்கு தடை
சென்னை: “மாதா பொறியியல் கல்லூரியில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், அக்கல்லூரியில் ஏரோ நாட்டிகல் பிரிவில் சேர்வதற்கான கவுன்சிலிங் ரத்து செய்யப்பட்டுள்ளது,” என அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் மன்னர் ஜவகர் கூறினார். உயர்கல்வி மாமன்ற துணைத் தலைவர் ராமசாமி, அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் மன்னர் ஜவகர், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் ராமச்சந்திரன், தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குனரக துணை இயக்குனர் கெல்வின் சந்திரசேகர், உயர்கல்வி மாமன்றத்தின் உறுப்பினர் செயலர் பாஸ்கரன் ஆகியோர் கொண்ட குழு திடீர் ஆய்விற்காக, மாதா பொறியியல் கல்லூரிக்கு சென்றது. ஆய்வுக்கு பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டது.