உள்ளூர் செய்திகள்

இந்தியாவின் தீப் ஜோஷிக்கு புகழ்பெற்ற மகசேசே விருது

மணிலா: ஆசியாவின் பெருமை வாய்ந்த ராமன் மகசேசே விருதுக்கு, இந்தியாவை சேர்ந்த தீப் ஜோஷி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த பெருமை வாய்ந்த விருதுக்காக, சீனாவை சேர்ந்த இருவர், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து மற்றும் மியான்மர் ஆகிய நாட்டை சேர்ந்த தலா ஒருவர் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மகசேசே விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, இந்தியாவின் தீப் ஜோஷி, மசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மையத்தில், மேலாண்மை மற்றும் பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர். இவர், பலஆண்டுகளாக, இந்தியாவின் கிராமப்புற மேம்பாட்டிற்காக, பணியாற்றி வருகிறார். மேலும், இவர், லாப நோக்கமற்ற ஒரு நிறுவனத்தை தொடங்கி, அதில், பல்கலைகழக பட்டம் பெற்றவர்களை நியமித்து, அவர்கள் மூலம் ஏழை சமுதாயத்தினர் மேம்பாட்டுக்காக பல திட்டங்களை தீட்டி செயல்பட்டு வருகிறார். இதற்காக, இவர் இவ்விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவரை தவிர, மியான்மரை சேர்ந்த ஹசாவா, சீனாவின் யு சியோகாங்க் மா ஜூன், பிலிப்பைன்சின் ஆன்டனியோ  ஓபோசா மற்றும் தாய்லாந்தின் கிரிசானா க்ரெய்சிந்து ஆகியோரும் இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்