உள்ளூர் செய்திகள்

தாய்மொழியிலேயே சிறப்பாக கல்வி கற்க முடியும்: மோடி

புதுடில்லி: தாய்மொழியிலேயே கல்வி கற்பது மூலம் மாணவர்கள் சிறப்பாக கல்வி கற்க முடியும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.புதிய கல்விக்கொள்கையில் உயர் கல்வி சீர்திருத்தங்கள் மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:*பல ஆண்டுகளாக இந்திய கல்வி முறையில் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை.*பல ஆய்வுக்கு பிறகே புதிய கல்வி கொள்கை உருவாக்கம்*அனைத்து தரப்புகளின் கருத்துகளை கேட்ட பிறகு, கல்விக்கொள்கை இறுதி செய்யப்பட்டது*கல்வி கொள்கையை அமல்படுத்துவது புதிய சவாலாக இருக்கும்*கல்வி கொள்கையில் எந்தவித பாகுபாடும் இல்லை.*கல்விக்கொள்கையில் மிகப்பெரிய சீர்திருத்தத்தை கண்டு சிலர் வருத்தமடைந்துள்ளனர்.*முன்னேறி செல்ல சீர்திருத்தமே ஒரே வழி*தேசிய கல்வி கொள்கையில், எந்தவிதமான சார்புகளும் இல்லை.*பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள், வெவ்வேறு சித்தாந்தங்களை சேர்ந்தவர்கள் கல்வி கொள்கை குறித்து கருத்துகளை தெரிவிக்கின்றனர்.*இந்தியாவை வலுவான நாடாக உருவாக்க வளர்ச்சியை அதிகரிக்க புதிய கல்விக்கொள்கை உதவும்*ஆரோக்கியமான விவாதங்கள் கல்வித்துறையை வளர்ச்சி அடைய செய்யும்*முழுமையான கல்வி என்பதே தற்போதைய தேவை. இதற்காக புதிய கல்வி கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது.*எதிர்காலத்திற்கு இளைஞர்கள் தயாராக உள்ளனர், என்பதை இந்த சீர்திருத்தம் உறுதி செய்கிறது*வருங்கால சந்ததிகளை வரும் காலங்களில் வரும் சவால்களை சந்திக்க தயார்படுத்தும்*மாணவர்களின் கற்பனை திறனை ஊக்குவிக்கும் வகையில் புதிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.*21ம் நூற்றாண்டிற்கான அடிதளத்தை புதிய கல்வி கொள்கை அமைக்கும்*முறையான கல்வி தற்போது தேவை என்பதற்காக புதிய கல்வி கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது.*பள்ளிக்கல்வயை புதிய முறையில் வடிவமைப்பதன் மூலம் நமது மாணவர்களை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லும்*இந்தியாவை வலுவான நாடாக உருவாக்குவதற்கு கல்வி கொள்கை உதவும்*தாய்மொழியிலேயே கல்வி கற்பது மூலம் மாணவர்கள் சிறப்பாக கல்வி கற்க முடியும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.*அதனால் தான் 5ம் வகுப்பு வரையில் தாய்மொழியில் கல்வி கற்க வேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது.*வெறுமனே பாடங்களை படிப்பதைவிட கேள்வி கேட்கவும், ஆய்ந்தறியும் வகையில், புதிய கல்விக்கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.*சர்வதேச குடிமகன்களாக இருக்க வேண்டும். ஆனால், நமது வேர்களை மறக்கக்கூடாது*கல்விக்கொள்கை மாற்றத்தை நாம் அனைவரும் ஏற்று கொள்ள வேண்டும். அதற்கு நாம் தயாராக வேண்டும்.*பாடதிட்டங்களை மாற்றுவதற்கு மாணவர்களுக்கு தற்போது சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.*நல்ல குடிமகன்களை உருவாக்கும் முயற்சி வெற்றிபெற வேண்டுமானால் மாணவர்கள் சமூக சூழ்நிலையோடு மாணவர்கள் கல்வி கற்க வேண்டும்*திறமை மற்றும் தொழில்நுட்பம் ஆகியவை நமது வளங்கள்.*தொழில்நுட்பம் மூலம் நமது சமூகத்தின் கடைகோடியில் இருக்கும் மாணவர் வரை கல்வியை கொண்டு செல்ல முடியும்.*கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கு இடையேயான இடைவெளியை குறைக்க முயற்சி செய்யப்படும்*ஆய்வு செய்வதிலும், அதனை குறைப்பதிலும் உள்ள இடைவெளியை புதிய கல்வி கொள்கை குறைக்கிறது*கல்வியின் நோக்கமே சிறந்த மனிதர்களை உருவாக்குவதுதான் என்பதை முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் சுட்டிகாட்டியுள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்